என் மலர்
நீங்கள் தேடியது "Fish farmers"
- கடவா குறிச்சி மலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததை தொடர்ந்து கண்மாய் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.
- விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரி களிடமிருந்து மானிய விலையில் வாங்கி கிராம கண்மாயில் உள்ள பகுதியில் பூஜை செய்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சியில் உள்ள முசுவனூத்து கண்மாய் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரியான மழை இல்லாதால் நிரம்ப வில்லை.
கடவா குறிச்சி மலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததை தொடர்ந்து கண்மாய் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.
இதனைத் தொடர்ந்து முசுவனூத்து கிராம விவசாயிகள் கண் மாயில் மீன் வளர்க்க முடிவு செய்தனர். அதன்படி நீர்வளத்துறை அதிகாரி களிடமிருந்து மானிய விலையில் வாங்கி கிராம கண்மாயில் உள்ள பகுதியில் பூஜை செய்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டனர்.
நிகழ்ச்சியில் முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், கிராம விவசாயிகள் பிச்சை, ராஜேந்திரன், காளியப்பன், முருகன், ரவி, அய்யாவு , திலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






