search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first underwater"

    • ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது
    • ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடிஅடிக்கல் நாட்டினார்


    மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் மெட்ரோ கிழக்கு -மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியானஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி உள்ளது.

    இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ வழித்தடம் 4.8 கி.மீ. நீளத்தில் ரூ.4,965 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    45 வினாடிகளில் இந்த பாதையை மெட்ரோ ரெயில் கடந்து செல்லும். இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோ ரெயிலில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    ×