என் மலர்
நீங்கள் தேடியது "Fine for shop owners"
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகர்பகுதியில் உள்ள பழக்கடைகள், மளிகைகடை மற்றும் சாக்லேட் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர்.
- குறிஞ்சிநகர், எம்.எம்.தெரு, லாஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பைகள் இருந்ததையொட்டி, சுமார் 16 கிலோ பிளாஸ்டிக் ெபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி அறிவுறுத்தலின் பே ரில் உணவு பாதுகாப்பு த்துறை அதிகாரிகள் நகர்பகுதியில் உள்ள பழக்கடைகள், மளிகைகடை மற்றும் சாக்லேட் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர்.
குறிஞ்சிநகர், எம்.எம்.தெரு, லாஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து சுமார் 16 கிலோ பிளாஸ்டிக் ெபொருட்களை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தலா ரூ.2000 என 3 கடைக்கும் ரூ.6000 அபராதம் விதிக்க ப்பட்டது. இந்த ஆய்வுப்பணி தொடர்ந்து நடைபெறும். தடைசெய்ய ப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்பு அலுவ லர் லாரன்ஸ் எச்சரித்து ள்ளார்.






