என் மலர்
நீங்கள் தேடியது "financial institution agent"
போலீஸ் என கூறி நிதி நிறுவன ஏஜெண்டை தாக்கி பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
மதுரை அழகப்பா நகரை சேர்ந்தவர் ராஜா சண்முகம் (வயது55). இவர் வங்கி, நிதி நிறுவனங்களில் தனி நபர் கடன், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் ஏஜெண்டாக உள்ளார்.
கடந்த மே மாதம் 30-ந்தேதி ராஜா சண்முகத்தை ஒரு நபர் தொடர்பு கொண்டு தனக்கு ரூ.5 கோடி கடன் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டார். இதனையடுத்து கடன் கேட்டவரை சந்திக்க ராஜா சண்முகம் தனது ஊழியர் சைமனை அழைத்துக்கொண்டு ஈரோடு அருகே உள்ள திண்டல் பகுதிக்கு வந்தார்.
கடன் கேட்டவர் நண்பர்களுடன் காரில் காத்திருந்தார். காரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடனுக்கு ஈடாக சொத்து கேட்டபோது தோட்டம் உள்ளதாக அந்த நபர் கூறினார்.
இதனையடுத்து கடனுக்கு ஈடாக வைக்கும் சொத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அதன்படி 2 கி.மீட்டர் தூரமுள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றனர். தோட்டத்தில் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
திடீரென கும்பல் ராஜா சண்முகம் மற்றும் சைமனை கட்டிப்போட்டு நாங்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார். உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி தரவேண்டும் என்று கூறி சரமாரியாக தாக்கினர். இதனால் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன், மோதிரம், நகை உள்ளிட்டவைகளை கும்பல் பறித்தது. விடுவிக்க ரூ.1 கோடியில் இருந்து தொடங்கி பேரம் ரூ.1½ லட்சத்தில் முடிந்தது. நேற்று முன்தினம் மதுரையில் உள்ள அலுவலக ஊழியர் ராமநாதன் என்பவரை தொடர்பு கொண்டு ராஜாசண்முகம் வரவழைத்தார்.
கும்பலிடம் ரூ.1 ½ லட்சம் பணத்தை கொடுத்து விட்டு இருவரையும் மீட்டார். காயத்துடன் இருந்த ராஜா சண்முகம் மற்றும் சைமனை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று ஈரோட்டில் இருந்து போலீசார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் என கூறி நிதி நிறுவன ஏஜெண்டை தாக்கி பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி போலீஸ் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.#tamilnews