என் மலர்
நீங்கள் தேடியது "FINANCIAL ASSISTANCE TO FIRE VICTIMS"
- பெரம்பலூரில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு அதிமுக நிர்வாகிகள் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.
- தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி 15 வது வார்டு ஆலம்பாடி சாலைலைய சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்- ராஜம்மாள், செல்வராஜ்-சந்தியா, ரமேஷ் - கவிதா ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கூலிவேலைக்கு மூன்று குடும்பத்தினரும் சென்றுவிட்டனர். இந்நிலையில் திடீரென நேற்று காலை 11.30 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் நிர்வாகிகளுடன்
சம்பவஇடத்திற்கு சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளாக தலா ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் வேட்டி ,சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.






