search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance company cheating"

    • நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் குற்றப்பிரிவு போலீசில் ரூ. 4.5 கோடி முதலீடு செய்ததாக புகார் அளித்தனர்.
    • தனிப்படை அமைத்து விசாரிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

    தேனி :

    திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் எம்.பி.ஏ. பட்டதாரி முத்துச்சாமி கோவையை தலைமையிடமாக கொண்ட யு.டி.ஐ. நிதிநிறுவனம் நடத்தினார். இதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், பெங்களூரில் கிளைகள் உள்ளன. வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆனந்த் தேனி கிளை மேலாளராக உள்ளார்.

    இந்நிறுவனத்தில் கம்பத்தைச் சேர்ந்த நபர், அவரின் நண்பர்கள் இணைந்து 1.10 கோடி முதலீடு செய்தனர். இரு மாதங்கள் லாப தொகையை வழங்கிவிட்டு பின்னர் அலுவலகத்தை பூட்டி உரிமையாளர் மாயமானார்.

    கம்பம் சத்தியமூர்த்தி புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநிலம் முழுவதும் 800 பேர் ரூ.17 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் குற்றப்பிரிவு போலீசில் ரூ. 4.5 கோடி முதலீடு செய்ததாக புகார் அளித்தனர்.


    எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரே, டி.எஸ்.பி.சுந்தர ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சீமை ராஜ், சவுந்திரபாண்டியன், பிச்சைப்பாண்டியன், ராமலட்சுமி, சரவணன் மேற்பார்வையில் தனி ப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

    புதுவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே எஸ்.எஸ்.எஸ். நிதி லிமிடெட் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் தனியார் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இந்த நிதி நிறுவனத்தை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகாயம், ராஜா, சுரேஷ், சிவசங்கர் ஆகிய 4 பேர் பங்குதாரர்களாக நடத்தி வந்தனர்.

    இந்த நிறுவனத்தில் அரியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிலரும் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் தங்களது நிதி நிறுவனத்தில் ரூ.1000-ம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் ஆண்டு இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு தனிநபர் கடனாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நிதி நிறுவனத்தில் சேர்ந்து ரூ.3 கோடிக்கு மேல் டெபாசிட் செய்தனர். டெபாசிட் செய்த சிலர் தனி நபர் கடன் கேட்டபோது நிதி நிறுவன பங்குதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி பணம் தறாமல் காலம் கடத்தி வந்தனர். மேலும் ஒரு சிலருக்கு இன்று பணம் தருவதாக கூறி இருந்தனர்.

    அதன்படி பணத்தை பெற்றுக்கொள்ள அவர்கள் இன்று காலை ஆவலோடு நிதி நிறுவனத்துக்கு வந்தனர். ஆனால் நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக காத்திருந்தும் நிதி நிறுவனம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து நிதி நிறுவன பங்குதாரர்களுக்கு போன் செய்தனர். ஆனால் அவர்கள் செல்போன்கள் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர்கள் ஆவேசம் அடைந்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களும் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று புலம்பியபடி கண்ணீர் விட்டனர்.

    இந்த தகவல் நிதி நிறுவனத்தில் பணம் கட்டிய மற்றவர்களுக்கும் பரவியது. அவர்களும் நிதி நிறுவனத்துக்கு படையெடுத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். நிதி நிறுவனத்தில் பணம் கட்டிய சில பெண்கள் பெரிய தொகை கடனாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் நகைகளை அடகு வைத்து செலுத்தி உள்ளனர். அவர்கள் கண்ணீர் வடித்தபடி, வாயில் வயிற்றில் அடித்து அழுதனர்.
    ×