search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fig Diet Foods"

    • சமையலில் மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது அத்திப்பழம்.
    • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய சமையலில் மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது அத்திப்பழம். உலர்ந்த அத்திப்பழத்தை பயன்படுத்தி இந்த குளிர்காலத்தில் பல சுவையான பதார்த்தங்களை செய்யலாம். மேலும் இந்த அத்திப்பழம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும் ஏன் இதை குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதனையும் பார்ப்போம்.

     அத்திப்பழம் சேர்த்த நட்ஸ் சட்னி:

    உலர்ந்த அல்லது பிரெஷான அத்திப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி, அதோடு கொஞ்சம் பாதாம் அல்லது வால்நட் சேர்த்து, கடைசியாக கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சீரக தூள் சேர்க்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்து எடுங்கள். இந்த சட்னியை தோசை, இட்லி தொட்டு சாப்பிடலாம்.

     அத்திப்பழம் மற்றும் பனீர் டிக்கா:

    யோகர்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், வத்தல் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்த கலவையில் அத்திப்பழ துண்டுகள் மற்றும் பன்னீரை மேரினேட் செய்யுங்கள். பின்னர் அதை க்ரில் அடுப்பில் வைத்து லேசாக கருகும் வரை சமைத்து எடுங்கள். இந்த அத்திப்பழ பன்னீர் டிக்கா குளிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்னாக்ஸாக இருக்கும்.

     காரமான அத்திப்பழ அரிசி சாதம்:

    அத்திப்பழ துண்டுகள், வெங்காயம், முந்திரி ஆகியவற்றை நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் இதில் பாஸ்மதி அரிசியை சேர்த்து சில நிமிடங்களுக்கு கிளறுங்கள். அரிசியோடு இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை அல்லது சிக்கன் ப்ராத் சேர்த்து சமைக்கவும். அவ்வளவு தான் அத்திப்பழ சாதம் தயார்.

     அத்திப்பழ பாதாம் அல்வா:

    உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை நெய்யில் சமைக்கவும். பின்னர் இதோடு பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து அல்வா பதம் வரும் வரை கிண்டுங்கள். கடைசியான சூடான அல்வா மேல் சில நட்ஸ்களை தூவி சாப்பிடுங்கள்.

     அத்திப்பழ சிக்கன் குழம்பு:

    நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சியை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இதோடு சீரகம், மல்லி, மஞ்சள், வத்தல் தூள் சேர்க்கவும். அடுத்து இந்த கலவையில் நறுக்கிய தக்காளி, சிக்கன், அத்திப்பழம் சேர்த்து சமைக்கவும். இந்த அத்திப்பழ சிக்கன் குழம்பு தனித்துவமான சுவையை கொடுக்கும்

    ×