என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Faulty electric motor alignment"

    மாரண்டஅள்ளியில் பழுதடைந்த மின்மோட்டார் சீரமைக்கப்பட்டது.
    மாரண்டஅள்ளி, 

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூ ராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டில் ஆறு வருடங்களுக்கு மேலாக கடைவீதி பகுதியில்  மின்மோட்டார் பழுதடைந்த தால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வந்தனர்.  

    இது பற்றி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் பேரூராட்சித்  நிர்வாகத்தி னர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    இதையடுத்து தலை வர் வெங்கடேசன், துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் மின்மோட்டார் சரி செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    குடிநீர் பிரச்சினையை தீர்த்து 12-வது வார்டு பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.  இதையடுத்து அப்பகுதி யில் வசிக்கும் மக்கள் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்க ளுக்கு நன்றியை தெரிவித்தனர்.
    ×