என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Father Periyar Park Vellore"

    • வேலூரில் நாளை தொடக்கம்
    • வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கேலோ இந்தியா பெண்கள் லீக் போட்டிகள் வேலூர் தந்தை பெரியார் பூங்காவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 5 மற்றும் 3 பேர் கொண்ட அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதிக்கு பின்னர் பிறந்த பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்கும் பெண்கள் அசல் ஆதார் அட்டை, பிறந்தநாள் சான்றிதழை கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

    இந்த தகவலை வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    ×