என் மலர்
நீங்கள் தேடியது "Father killing son"
தன்னை விடுத்து தம்பிக்கு திருமணம் செய்து வைத்ததை தட்டி கேட்டதால் இரும்பு கம்பியால் அடித்து மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அய்யர்சாமி. இவருக்கு மூவேந்தன்(31), அரவிந்தன்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூவேந்தன் வேலைக்கு செல்லாமல் ஊதாரிதனமாக சுற்றி வந்துள்ளார். இதனிடையே அரவிந்தன் தனது உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக தனது தந்தையிடம் கூறிவந்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் பேசி முடிவு செய்தனர்.
நேற்று அரவிந்தனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது தந்தையிடம் வந்து மூவேந்தன் அண்ணன் இருக்கையில் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்தால் ஊரில் உள்ளவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என தகராறு செய்துள்ளார். தம்பி வேலைக்கு செல்வதாலும், அவன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாலும் அவசரமாக இந்த ஏற்பாடுகள் செய்ததாக அய்யர்சாமி தனது மகனிடம் கூறியுள்ளார்.
இருந்தபோதும் சமாதானம் அடையாமல் மூவேந்தன் தனது தந்தையிடம் தகராறு செய்தபடி இருந்ததால் அவரை இரும்பு கம்பியால் அடித்து தாக்கினார். பின்னர் மயக்கமடைந்த அவரை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் மாலையில் திரும்பி வந்து அந்த அறையை திறந்து பார்த்தபோது மூவேந்தன் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மாயனத்திற்கு கொண்டு சென்று எரிக்க முயன்றனர். இந்த தகவல் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சின்னமனூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து மூவேந்தன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை அடித்து கொன்ற தந்தை அய்யர்சாமியை கைது செய்தனர். தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டதும், தந்தை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.