search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers survey"

    பிரதமர் மோடியில் கிசான் சமான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற தகுதியான விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. #FarmersAid #KissanSammanScheme
    சென்னை:

    நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சமான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இதில் முதல் தவணை தொகையான ரூ. 2 ஆயிரத்தை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்துக்குள் அனைவரது வங்கி கணக்கிலும் செலுத்திவிட தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கான பணிகள் அனைத்து மாநிலங்களிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இந்த திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கணக்கெடுப்பு பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் இந்த கணக்கெடுப்பை நடத்துகிறார்கள். இதற்காக தனி விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.



    அதில் பெயர், பிறந்த தேதி, தொழில், ஆதார் எண், வங்கி கணக்கு எண், விவசாயி பெயரில் இருக்கும் விவசாய நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, பட்டா எண், மொபைல் எண் உள்பட 23 விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

    இந்த விபரங்களுடன் புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் இருக்கும் விபரங்கள் சரிதானா? என்பதை கிராம நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். #FarmersAid #KissanSammanScheme

    ×