search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers shift"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை, உரம், கூலி உயர்வால் கரிமூட்டம் தொழிலுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.
    • பெரும்பாலான விவசாயிகள் இதை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் இடுபொருள், உரம் விலை உயர்வால் விவசாயத்துக்கு அடுத்ததாக வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக விளங்குகிறது கரி மூட்டம். இது விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். இத்தொழிலுக்கு பிரதான மூலப்பொருளாக காட்டு கருவேல மரங்கள் பயன்டுகின்றன.

    இது குறித்து விவசாயி விஜயன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவா டானை வட்டம் தமிழகத்தின் இரண்டாவது நெல் களஞ்சியமாக விளங்குகிறது. இங்கு சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.அத்தோடு அபிராமம், பரமக்குடி, முதுகுளத்தூர் , போகலூர், நயினார்கோவில், கடலாடி, சாயல்குடி கமுதி, ஆர்.எஸ்.மங்களம், திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் விவசாயம் பயிரிடப்படுகிறது.

    ஆனால் விவசாயத்தில் போதிய லாபம் இல்லை. மேலும் விதை நெல், உரம், விவசாய கூலி உயர்வு காரணமாக விவசாயம் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் விவசாயத்தை கைவிட்டு கரிமூட்டம் ேபாடும் தொழிலுக்கு மாறி வருகின்றனர். மாவட்டத்தின் வறட்சியான சூழ்நிலையிலும் வளரக்கூடிய காட்டு கருவேல மரங்களை வெட்டி விறகு களை சேம்பர், காளவாசல் போன்ற செங்கல் தயாரிக்கும் சூளைக்கும் மேலும் சின்ன விறகுகள் தூர்கட்டைகளை அடுக்கி மூட்டம் போட்டு கரிகளை மூட்டையாக கோயமுத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு சாயப்பட்டறை களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதிக லாபம் கிடைக்கிறது இதனால் விவசாயத்திற்கு பதிலாக மாற்று தொழிலாக கரிமூட்ட தொழில் செய்யவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கரிமூட்ட தொழில் செய்யும் செல்வராஜ் கூறும்போது, விவசாயப்பணிகள் இல்லாத காலங்களில் கரிமூட்டம் போட்டு வருமானத்தை ஈட்டி வருகிறோம். ஏழ்மை நிலையிலும் விவசாயிகள் கருவேல மரங்களை வெட்டி விறகுகளாகவே பிற மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். கரிமூட்டம் போடுவதற்கு உடல் உழைப்பே மூலதனம். எனவே விவசாயிகள் கரிமூட்ட தொழிலை வாழ்வதாராமாக கொண்டுள்ளனர். தரிசு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வெட்டி விறகுகளை அடுக்கி கரிமூட்டம் போடுகின்றனர். அதன்மூலம் உருவாகும் கரிகளை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங் களுக்கும் விற்பனைக்காக அனுப்புகின்றனர். இதனால் கோடைகாலங்களில் செய்து வந்த கரி மூட்ட தொழிலை மழை காலங்களிலும் செய்து தற்போது விவசாயத்திற்கு மாற்று தொழிலாகவும் விவசாயிகளுக்கு இது வாழ்வாதாமாக உள்ளது.

    பெரும்பாலான விவசாயிகள் இதை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலாகவும் செய்து வருகின்றனர். விறகுகளை ஒரு டன் ரூ.3000 முதல் 4000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கரிமூட்டம் போடுகிறோம். அதிலிருந்து 15 முதல் 20 மூட்டைகள் வரை கிடைக்கும் கரிகளை மூட்டை ரூ.1000 வரை விற்பனை செய்கிறோம். இதனால் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயத்தைவிட இப்பகுதி மக்கள் கரிமூட்ட தொழிலை செய்து வருகிறோம் என்றார்.

    விவசாயமும், விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பு என்று இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து மத்திய-மாநில அரசுகள் சொல்லி வந்தாலும் விவசாயம் சார்ந்த எந்த உருப்படியான திட்டங்களும் நிரந்தரமாக இல்லை. அதே போல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பது இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது. அதிக அளவில் விவசாயிகளும் விவசாயமும் நிறைந்த தமிழகத்தில்தான் விவசாயத்திற்கு மாற்றாக காட்டு கருவேல விறகுகளை வெட்டி கரிமூட்டத்தொழில் செய்கிறார்கள் என்பது வேதனையான விசயமாகும்.

    வருடம் தவறாமல் விதைக்கும், உரத்திற்கும் விலையேற்றம் வருகிறதே தவிர அதை வாங்கி வேளாண்மை செய்து விவசாயி விற்கும் பொருளுக்கு மட்டும் விலையேற்றம் வருவதில்லை.

    ×