என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers consultation meeting"

    • வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
    • இத்திட்டத்தின் கீழ் புதிய தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உழவர் நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டியராஜன் தலைமையேற்று நடத்தினார்.

    வட்டார தொழில் நுட்ப உறுப்பினர்களான தோட்டக்கலைத்துறை வேளாண் பொறியியல் துறை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் கால்நடைத்துறை போன்ற துறைகளில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    மேலும் அட்மா திட்டத்திற்கான 2022-23 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையில் உள் மற்றும் வெளிமாநில கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கங்கள், பயிற்சிகள், பண்ணை பள்ளி போன்ற இனங்களில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அட்மா திட்டத்தின் மூலமாக தோட்டக்கலைத் துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் புதிய தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உழவர் நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் திட்ட மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ×