search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fall in jaggery price"

    • பரமத்தி வேலுார் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
    • கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

    இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்க ல்பாளை யத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெ ட்டில், சனி மற்றும் புதன்கிழமை களில் விற்பனை செய்கின்றனர்.

    நேற்று நடந்த ஏலத்தில், தமிழகத்தின் பிற மாநிலங்க மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வராததால், விலை சரிவடைந்தது. கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,180 ரூபாய்-க்கும், அச்சுவெல்லம், 1,200-ரூபாய் விற்பனையானது.

    இந்த வாரம் உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,140 ரூபாய்-க்கும், அச்சுவெல்லம், ஒரு சிப்பம், 1,180 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம் 5,000 சிப்பங்களும், அச்சு வெல்லம் 5,500 சிப்பங்களும், ஏலத்திற்கு வந்திருந்தது. நேற்று நடந்த ஏலத்தில், வெல்லம் விலை சரிவால், கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

    ×