search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extension. Rail"

    • மயிலாடுதுறை-திண்டுக்கல் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

    மதுரை

    மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ், மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ஆகிய இரண்டையும் இணைத்து, ஒரே ெரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடு துறையில் இருந்து அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை செல்லும். ‌ இந்த ரெயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடை க்கானல் ரோடு, மதுரை, திருப்ப ரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபா ளையம், சங்கரன் கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசியில் நின்று செல்லும்.

    ×