என் மலர்

  நீங்கள் தேடியது "Explaining to the public the various achievements made by the DMK government"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. அரசின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது
  • நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

  வந்தவாசி:

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராம கூட்டு சாலையில் வந்தவாசியை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகண்டு திமுக அரசு செய்த பல்வேறு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

  இந்தப் பொதுக் கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பால ஆனந்தன், எதிரொலி மணியன், தெள்ளார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா, வந்தவாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் நந்தகோபால், வந்தவாசி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, தெள்ளார் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், வந்தவாசி நகர செயலாளர் தயாளன், வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், வந்தவாசி நகர மன்ற துணை தலைவர் சீனிவாசன, ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், வந்தவாசி நகர மன்ற உறுப்பினர் கிஷோர்குமார், திமுக நிர்வாகிகள் பிச்சைகண்ணு, தெள்ளார் கோபிநாதன், மதன்குமார் ஒலெட் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  ×