என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVERYONE MUST COME FORWARD TO DONATE BLOOD"

    • அனைவரும் ரத்ததானம் அளிக்க முன்வரவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 76 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் ரத்த தானம் வழங்குபவர்களுக்கு புதிய இணையத்தளத்தை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். உலக ரத்த தான தினத்தையொட்டி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ரத்தம் வழங்கி ரத்த தானத் தை தொடங்கி வைத்து பேசினார்,

    அப்போது அவர் கூறும்போது, நாம் வழங்கும் ரத்தம் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் சக்தியுடையது. ஆகையால், ரத்த தானத்தை ஒற்றுமையுடன் செய்வோம். ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் உயிர்களைக் காப்போம். நாம் உயிரோடு இருக்கும் பொழுது நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதை கடைபிடிக்க வேண்டும்.

    இதுபோன்ற தானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். இது இயற்கை அளித்த கொடையாகும். கொடையாளர்கள் ரத்த தானத்தை பயனுள்ளதாக அர்ப்பணிப்புடன் அயராது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, ரத்ததானம் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்ட ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நாடக த்தை பார்வையிட்டார். பின்னர் குருதிக் கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

    ×