search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ethiopian Airlines flight"

    கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் என்ற பயணி விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். #AntonisMavropoulos #EthiopianAirline
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அவர் விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.



    இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. விமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.  #AntonisMavropoulos #EthiopianAirline   #Boeing737MAX8
    கென்யா நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். #EthiopianAirlines #flightcrashe #157killed
    அடிடாஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 8.38 மணியளவில் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.

    வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

    பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

    இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. 149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அஹமத் இரங்கல் தெரிவித்துள்ளார். #EthiopianAirlines #flightcrashe #157killed
    ×