என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News The boy who kidnapped the girl saying the word 'desire' was imprisoned"

    கோபி அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோபி:

    கோபி அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்ப லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அதே கம்பெனியில் கோபிசெட்டி பாளையம் அடுத்த நாதி பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது விக்னேசுக்கும் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதை அவர்கள் கண்டித்தனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 7-ந் தேதி விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் கொளப்பலூர் பகுதியில் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அந்த சிறுமியை மீட்டு அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  விக்னேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை போலீசார் கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
    ×