என் மலர்
நீங்கள் தேடியது "Erode News Pushing down the mother-daughter who went on the moped and flushing the jewelry"
சென்னிமலையில் மொபட்டில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் மொபட்டில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் ரங்கம்பாளையத்தினை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி(43). இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு பிரபாவதி (17) என்ற மகள் உள்ளார். பிரபாவதி சென்னிமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று, பிரபாவதி இறுதி பொதுத்தேர்வினை எழுதினார். பள்ளி நிர்வாகத்தின் அழைப்பின் படி மாணவிகளை பெற்றோர் வந்து அழைத்து செல்ல சொல்லியுள்ளனர். இதனால் ஜெகதீஸ்வரி நேற்று மதியம் மொபட்டில் பள்ளிக்கு சென்று தனது மகள் பிரபாவதியை அழைத்து கொண்டு சென்றார்.
சென்னிமலை அடுத்துள்ள ராமலிங்கபுரம் நொய்யல் பாலம் அருகே சென்றுள்ளார். அப்போது பின்புறம் இருசக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் வேகமாக வந்து ஜெகதீஸ்வரி மொபட்டில் மோதி தாய், மகள் இருவரையும் கீழே தள்ளினார்.
இதையடுத்து ஜெகதீஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் தங்க ஜெயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினார். இது குறித்து மகள் பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






