என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News Mariamman Temple Kumbabhishekam"

    கவுந்தப்பாடி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    கவுந்தப்பாடி அருகே உள்ள மின்ன வேட்டுவம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெருந்தலையூர் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு தொடர்ந்து யாக பூஜை மற்றும் வேள்வி பூஜைகள் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கோபுர கலசம், விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன், முனியப்பன், கருப்புசாமி, தன்னாசியப்பன் மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    விழாவிற்கு கவுண்டம்பா–ளையம், கிருஷ்ணாபுரம், சாலையூர், ஆய்கவுண்டனூர், மாணிக்க வலசு, கவுந்தப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்க–ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    ×