என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ernavur"

    எர்ணாவூர் அருகே தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மாதவரம்:

    எர்ணாவூர், ஆதிதிராவிடர் காலணி, 15 வது தெருவை சேர்ந்தவர், ராஜம்மாள்,47.

    இவர் நேற்றிரவு வீட்டை பூட்டி விட்டு, பாரத் நகரில் உள்ள, உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு, 9:00 மணிக்கு திடீரென, வீட்டின் கூரையில் தீப்பிடித்து,.

    அருகருகே உள்ள, குடிசைகளுக்கும் பரவியது. தார் சீட் போட்ட வீடுகள் என்பதால், தீ மளமளவென பற்றி எரிந்தன.

    தகவல் அறிந்ததும் எண்ணூர் திருவொற்றியூர், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.

    தீ விபத்தில், வீட்டினுள் இருந்த, நகை, பணம் உள்ளிட்டவை எரிந்து விட்டதாக, வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×