search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ernakumal"

    எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #SarithaNair
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கமி‌ஷனும் அமைக்கப்பட்டது.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.

    இந்த வழக்கில் கைதான சரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சரிதாநாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர்.

    ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு சரிதாநாயர் எதிர்ப்பு தெரிவித்தார். பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்ததை ஏற்க முடியாது என்று கூறிய சரிதாநாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

    எர்ணாகுளம் தொகுதியை போட்டியிட தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றம் சாட்டப்பட்ட பலரும் தேர்தலில் போட்டியிடுவது சகஜமாகி விட்டது. அரசியலில் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பிரசாரமும் செய்கிறார்கள். எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலும் அவர்கள் இதுபற்றி கவலைப்படுவதில்லை. வாக்காளர்களும், பொதுமக்களும் இதை கண்டு கொள்வதில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியும் என்றால் நானும் தேர்தலில் நிற்க முடியும். இதனை பொதுமக்களுக்கு புரிய வைக்கவே நான், தேர்தலில் நிற்கிறேன்.

    தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எவரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதை வாக்காளர்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நான் தேர்தலில் நிற்பதன் மூலம் இதுபற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளம் தொகுதியில் சரிதாநாயர் களம் இறங்க இருப்பது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.   #LokSabhaElections2019 #SarithaNair

    ×