search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England prime minister"

    • இணையதளம் மூலம் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்களித்த உறுப்பினர்கள் தங்களது முடிவுகளை மாற்றி மீண்டும் வாக்களிக்கும் நடை முறையை நீக்க கன்சர்வேட் டிவ் கட்சி முடிவு.

    இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

    முதல் சுற்றில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக், வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னேறினர்.

    இறுதிச்சுற்றில் சுமார் 1.80 லட்சம் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்து கட்சி தலைவரையும் அதன் மூலம் அடுத்த பிரதமரையும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இறுதிச்சுற்றுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் தகவல் தொடர்பு தலைமையகத்தின் ஒரு பிரிவான இணையதள பாதுகாப்பு மையம், கன்சர்வேட்டிங் கட்சிக்கு ஒரு பரிந்துரையை வழங்கி உள்ளது.

    பிரதமரை தேர்ந்தெடுக்க கட்சி உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்தாலும், பின்னர் இணையதளம் மூலம் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் வாக்களிக்கும்போது, சட்ட விரோதமாக ஊடுருவி முடிவுகளை மாற்றுவதற்கான அபாயம் உள்ளது என்றும், இந்த நடைமுறை தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இணையதள பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து வாக்களித்த உறுப்பினர்கள் தங்களது முடிவுகளை மாற்றி மீண்டும் வாக்களிக்கும் நடை முறையை நீக்க கன்சர்வேட் டிவ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இணைய தள ஊடுருவலில் இருந்து தப்ப வாக்களிப்பு முறையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாக்குப் பதிவை சற்று தாமதமாக நடத்த கன்சர்வேட்டிவ் கட்சி முடிவு செய்துள்ளது.

    இங்கிலாந்து பிரதமரை கொல்ல திட்டமிட்ட பயங்கரவாதிக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. #UKPrimeMinister #TheresaMay

    லண்டன்:

    இங்கிலாந்தில் பிர்மிங் காம் பகுதியைச் சேர்ந்தவர் நாய்முர் ஜகாரியா ரஹ்மான் (21). ஐ.எஸ். பயங்கரவாதியான இவர் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்ல திட்டமிட்டார்.

    இவர் தனது நண்பருக்கு டெலிகிராம் மூலம் தகவல் அனுப்பினார். அதில் பாராளுமன்றத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தி பிரதமர் தெரசா மேவை தலை துண்டித்து கொலை செய்ய விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை அறிந்த உளவுத்துறை அவரை தீவிரமாக கண்காணித்தது. வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் வாங்கிய போது அவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.

    அவர் மீது லண்டனில் உள்ள பழைய பெய்லி மத்திய குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ஹாட்டன் கேவ் அவருக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். #UKPrimeMinister #TheresaMay

    ×