என் மலர்
நீங்கள் தேடியது "engineering college student suicide"
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ஹரிதா (வயது19). இவர் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஹரிதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சோகத்தில் இருந்து வந்த ஹரிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று அவர் விஷத்தை குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்த ஹரிதாவை அவரது பெற்றோர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஹரிதா பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு காசிவிஸ்வநாத நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் நாகர்கோவிலில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது20) இவர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார்.
இவர் வீட்டில் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்தார். நேற்றும் அதுபோல விஜயகுமார் செல்போனில் பேசியபடி இருந்தார். இதனை அவரது தாய் அருந்ததி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் அங்கு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






