என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Encroachment by pelting gravel"

    • மாவட்ட கலெக்டர் ஓய்வறை பங்களா வளைவுச்சாலையில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி க்கற்கள் பல நாட்களாக பிரதான சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது
    • வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களில் அதிகமாக கூடுகின்றனர். சுற்றுலா தளங்களின் பல இடங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி,முறையான வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படாத நிலையில் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    பிரதான நெடுஞ்சாலை களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மூஞ்சிக்கல் பகுதியில் சாலையின் இரு பகுதிகளிலும் கனரக வாக னங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து பாம்பார்புரம் செல்லும் மாவட்ட கலெக்டர் ஓய்வறை பங்களா வளைவுச்சாலையில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி க்கற்கள் பல நாட்களாக பிரதான சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்து நெரிசல் கொடைக்கானலில் இருக்காது என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. கோடை சீசன் நிறைவடைய இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. மலர் கண்காட்சி, கோடை விழா நடைபெறும் போது அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வில்லை. இது ஒவ்வொரு சீசனிலும் தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்த தீர்வை காண வேண்டும் என்பதே சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×