என் மலர்
நீங்கள் தேடியது "Electricity shock"
அரூர் அருகே மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரீசியனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த பட்டகப்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது50). எலக்ட்ரீசியனான இவர் அரூர் அடுத்த டி.புதுரைச் சேர்ந்த முருகன் என்பவரது விவசாய நிலத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார். அப்போது மின்மோட்டார் அறையில் புதிதாக பியூஸ் கேரியரை பொருத்திய போது எதிர்பாராத விதமாக தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






