search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-Batta Scheme"

    • நிலம் தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயம் ஆக்கப்பட்டாலும், இதுவரை வழங்கிய பட்டா உத்தரவுகள் காகித வடிவிலேயே இருக்கின்றன.
    • பயனாளிகள் விபரத்தை சேகரித்து இ - பட்டா வழங்கும் ஆயத்த பணி துவங்கியுள்ளது.

    திருப்பூர்:

    டிஜிட்டல் இந்தியா திட்ட வழிகாட்டுதலை பின்பற்றி, நில ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.நிலம் தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயம் ஆக்கப்பட்டாலும், இதுவரை வழங்கிய பட்டா உத்தரவுகள் காகித வடிவிலேயே இருக்கின்றன.

    எனவே நிலஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து இ - பட்டா வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா ஆவணங்கள் அனைத்தும் இ - பட்டாவாக, அப்டேட் செய்யும் பணி துவங்கியுள்ளது.இதனால் காகித வடிவ பட்டாவை பாதுகாக்க சிரமப்படாது. தேவைப்படும் போது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

    இது குறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பயனாளிகள் விபரத்தை சேகரித்து இ - பட்டா வழங்கும் ஆயத்த பணி துவங்கியுள்ளது. பட்டாவில் உள்ள வழக்கமான விபரங்களுடன், ஆதார் உள்ளிட்ட பயனாளிகளின் கூடுதல் விபரத்தை இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.மாவட்டம் வாரியாக இ - பட்டா வழங்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு இ - பட்டா பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இ - சேவை மையத்தில் சான்றிதழ் வழங்குவது போல வருங்காலத்தில் இ - பட்டாவும் எளிதாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×