search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-Application"

    • கடந்த மாதம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் இ-ஆபீஸ் மென்பொருள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • ஏப்ரல் மாதத்தில் மூன்றாமிடத்தில் இருந்த திருப்பூர் மாநகரம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    திருப்பூர்,

    காகித பயன்பாட்டை குறைக்கவும், மின்னணு சாதனங்கள் மூலம் ஆவணங்களை அனுப்பவும் 'மின் ஆளுமை' திட்டம், 1Ñ ஆண்டுக்குமுன் காவல்துறையில்அமலானது.போலீசாரின் அலுவலக துறை சார்ந்த கோப்புகள் அனைத்தும் கணினி மூலம் அனுப்ப இ-ஆபீஸ்மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகளவில் பயன்படுத்தும் மாவட்டம், மாநகர போலீசுக்கு, மாநில அளவில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஒவ்வொரு மாதமும்கவுரவித்து வருகின்றனர்.

    இ-ஆபீஸ் பயன்பாட்டில், 97.5 புள்ளிகள் பெற்று, திருப்பூர் மாநகர போலீஸ் முதலிடம் பிடித்தது. கடந்த மாதம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் இ-ஆபீஸ் மென்பொருள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 57.5 புள்ளிகளுடன் நெல்லை மாநகரம் இரண்டாமிடம், 52.5 புள்ளிகளுடன் கோவை மூன்றாமிடம் பிடித்துள்ளது.

    மாவட்ட அடிப்படையில் 97.5 புள்ளிகளுடன் கிருஷ்ணகிரி முதலிடம், 41 புள்ளிகளுடன் கோவை பத்தாமிடம், 25 புள்ளிகளுடன் திருப்பூர் 27வது இடம், 10 புள்ளிகளுடன் நீலகிரி 32வது இடத்தை பிடித்துள்ளது.போலீஸ் சரக அடிப்படையில் 92.5 புள்ளிகளுடன் தஞ்சாவூர் முதலிடம், 35 புள்ளிகளுடன் கோவை 7-ம் இடத்தில் உள்ளது. போலீஸ் மண்டல அடிப்படையில், 87.5 புள்ளிகளுடன் மத்திய மண்டலம் முதலிடம், 37.5 புள்ளிகளுடன் கோவை மூன்றாமிடம் பிடித்துள்ளது.மேலும் ஏப்ரல் மாதத்தில் மூன்றாமிடத்தில் இருந்த திருப்பூர் மாநகரம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 23வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், 27வது இடத்துக்கு சென்றுள்ளது. மாநகரம் முதலிடம் பிடித்ததையொட்டி கமிஷனர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோரை கமிஷனர் பாராட்டினார்.

    ×