search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowning laborer"

    • மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர். சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன. இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

    இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது.

    அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பி உடலை தேடி வந்தனர். சுமார் 500 அடி ஆழம் என்பதால் 3 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சின்னத் தம்பியின் உடல் தானாக மிதந்தது.

    அரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    காவேரிப்பாக்கம் அருகே மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அரக்கோணம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது40). கூலி தொழிலாளி இவரது மனைவி யாசினி. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    சுந்தர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள கண்ணங்குளத்தில் மீன் பிடிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரின் மனைவி யாசினி கண்ணங்குளத்திற்கு சென்று பார்த்தார். அப்போது சுந்தர் பிணம் குளத்தில் மிதந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுந்தரின் உடலை போராடி மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×