search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water connections"

    • காங்கயம் நகராட்சியில் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது
    • நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சியில் 2020 -ம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொடுத்த கால அவகாசத்தைத் தாண்டியும் இன்னும் நிலுவை தொகை செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரில் உடையாா் காலனி, பொன்னி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா்க் குழாய் துண்டிப்பு நடவடிக்கையைத் தவிா்த்துக் கொள்ளவும். குடிநீா்க் கட்டணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா். குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால், கடந்த ஒரு வாரத்தில் காங்கயம் நகரில் 40 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் நகராட்சி வாடகைதாரர், குத்தகைதாரர் நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட குத்தகை, வாடகை கடைக்காரராகிய நாங்கள் மாத மாதம் வாடகை செலுத்தி வரும் நிலையில், இப்போது வாடகை தாமதமானால் மாதம் 10-ந் தேதிக்குள் கட்டவில்லை எனில் தண்ட வட்டியாக 18 சதவீதம் வசூலிப்பதாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையின்படி எங்களால் வாடகை மட்டுமே செலுத்த முடியும் நிலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம். இந்நிலையில் 18 சதவீதம் தண்ட வட்டியை எங்களால் கட்ட இயலாது. எங்களுக்கு வாடகை செலுத்த 3 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது.எனவே பழைய முறையை பின்பற்றி வாடகை வசூலிக்க வேண்டும். புதிய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×