என் மலர்
நீங்கள் தேடியது "donated liver"
ஜோகன்ஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரை சேர்ந்த ஒரு பெண் குழந்தை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாள். மாற்று கல்லீரல் ஆபரேசனுக்கு காத்து இருந்தாள்.
180 நாட்களாகியும் அவளுக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. இதனால் உயிருக்கு போராடிய அவளை காப்பாற்ற தாயார் முன்வந்தார். ஆனால் அவர் எய்ட்ஸ் (எச்.ஐ.வி.) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இருந்தும் அவரது கல்லீரலை தானம் பெற்று அந்த சிறுமிக்கு பொருத்த டாக்டர்கள் தயாரானார்கள். பின்னர் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு ‘ஆன்டி ரெட்ரோவைரல்’ என்ற சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் தயாரிடம் இருந்து கல்லீரலை தானமாக பெற்று அவரது மகளுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தினர். இந்த ஆபரேசனை ஜோகன்ஸ் பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ரேன்ட் பல்கலைக்கழக டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இந்த ஆபரேசன் முடிந்து ஒரு வருடம் ஆகியும் கல்லீரல் தானம் பெற்ற சிறுமியை எய்ட்ஸ் நோய் தாக்கவில்லை. இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக எய்ட்ஸ் நோய் பாதித்தவரின் கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. #DonatesLiver






