search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dog marriage protest"

    சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #ValentinesDay

    ராயபுரம்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன.

    கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் தர்ம ரக்ஷா சபா சார்பில் அதன் மாநில தலைவர் செல்வம் உள்பட 3 பேர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். அப்போது நாய் ஒன்றுக்கு செல்வம் தாலி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் தாலி கட்டியது ஆண் நாய் என்பதை தெரிந்ததும் அப்பகுதி மக்கள் இடையே சிரிப்பலை எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து செல்வம் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    காதலர் தினத்துன்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் எறும்புக்காடு சந்திப்பில் இந்து மகா சபா சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    நாற்காலிகளில் 2 நாய்களை அமர வைத்து அதற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் திருமணம் போலவே புது ஆடைகள், வளையல்கள், பூக்களை தட்டில் வைத்திருந்தனர். மாலை மாற்றி நாய்களுக்கு திருமணம் செய்ததும், பூக்களை தூவினார்கள். மேலும் நாய்களுக்கு பால், பழமும் ஊட்டப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வரும் காதல் ஜோடிகளை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம். காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர். #ValentinesDay

    ×