என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Do not supply drugs-police advice"

    • சேலம் சகாதேவபுரத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் மருந்து வணிகர்கள் சங்கம் இணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாநகர தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் சகாதேவபுரத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் மருந்து வணிகர்கள் சங்கம் இணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தெற்கு துணை போலீஸ் கமிஷனர் லாவண்யா, வடக்கு துணை போலீஸ் கமிஷனர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சமுதா யத்தின்பேரில் நீங்கள் அக்கறை வைத்துள்ளீர்கள். இன்னும் உங்களது பங்கு அதிகரிக்க வேண்டும் .போர்நடக்கும் போது தான் காயம் பட்டவர்களுக்கு வலியை குறைப்பதற்காக கஞ்சா கொடுப்பது வழக்கம்.

    ஆனால் இன்று போதை பொருள் அதிகள வில் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.அதை தடுக்க போலீசில் தனிதுறை ஏற்படுத்தி அவர்கள் தடுத்த வருகின்றனர்.இன்றைய இளைஞர்கள் அறிவு திறனில் வேகமாக வளர்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் தீய பழக்கத்திற்கும் அடிமை யாகி வருகின்றனர். குழந்தை கள் மீது காட்டப்படும் அக்கறை சமூகத்தின் மீதும் காட்டவேண்டும்.மருந்து சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கு மருந்துகள் கொடுக்கக் கூடாது என்றார்.

    துணைபோலீஸ் கமிஷனர் லாவண்யா பேசும்போது ,மருந்து கடைகளில் சில பொருட்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. போதை வஸ்துக்களை பயன்ப டுத்தக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ய கூடாது. சமுதாயத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் மருந்துகளை கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

    டாக்டர்களின் மருந்துசீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது .சட்டத்திற்கு கட்டுப்பட்டு தார்மீக அடிப்படையில் விற்பனை செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம் .தவறான வழியில் லாப நோக்கத்துடன் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    கூட்டத்தில் வடக்கு துணை போலீஸ் கமிஷனர் லட்சுமிபிரியா, உதவி போலீஸ் கமிஷனர்கள் நாகராஜன், சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள், மருந்து வணிகர்கள் சங்க தலைவர் செந்தில்வடிவு, மருத்துவ ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×