search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk volunteers death"

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலியானார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் ஞானமணி(வயது 54). இவர் தி.மு.க.வில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி பரிமளா(48). இவர்களுக்கு ரஞ்சிதா(22) என்கிற மகளும், ரஞ்சித்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பரிமளா அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இதேபோல் எலவத்தடி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்(47). இவரது மனைவி ஜானகி(42), மகள் ரம்யா(22), மகன்கள் அஜித்குமார்(20), அரவிந்த்(15) ஆவார்கள்.

    ஞானமணி, ராமலிங்கம் ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள். நேற்று மாலை 6 மணிக்கு சத்திரம் கூட்டுரோட்டில் இருந்து பேர்பெரியான்குப்பத்திற்கு 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வேகாக்கொல்லை என்கிற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயடைந்த ஞானமணி, ராமலிங்கம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை கேட்டு மன வருத்தத்தில் இருந்த தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
    கோவை:

    கோவை அன்னூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 63). அன்னூர் பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. பிரதிநிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளை டி.வி.யில் பார்த்த இவர் வேதனை அடைந்தார். கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என குடும்பத்தினரிடம் கூறிக் கொண்டிருந்தார். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    காரமடை அருகே தாயனூரை சேர்ந்தவர் பொன்னுசாமி(75). தாயனூர் கிளை தி.மு.க. அவை தலைவராக இருந்தார். கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட இவர் நேற்று மாரடைப்பால் இறந்தார்.

    கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட வருத்தத்தில் தி.மு.க.வை சேர்ந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அம்சகுமார் (65), திருப்பூர் பாப்பான் குளத்தை சேர்ந்த சபரிநாதன்(54), ஊட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(55) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×