என் மலர்
நீங்கள் தேடியது "Diwali items"
- வேலூர்-காட்பாடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
- தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர், காட்பாடியில் தீபாவளி பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோ தியது. காட்பாடி ரெயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிகளவில் வந்தனர்.
காட்பாடியில் நெரிசல்
காட்பாடி பகுதியில் நேற்று மாலை திடீரென போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடி ரெயில்வே பாலத்தில் இருந்து வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.
காட்பாடி யில் இருந்து வேலூர் நோக்கி வரும் வாகனங்கள் சிறிது, சிறி தாக நகர்ந்தது. இதனால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
இதே போல விருதம்பட்டில் இருந்து காட்பாடியை நோக்கி சென்ற வாகனங் களும் நெரிசலில் சிக்கியது. விருதம்பட்டு, காங்கேயநல் லூர் கூட்ரோடு, சித்தூர் பஸ் நிலையம், தாராபட வேடு பஸ் நிறுத்தம், காட்பாடி ரெயில்வே பஸ் நிறுத்தம், காட்பாடி பஸ் நிறுத்தம், ஓடை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், சில்க்மில் பஸ் நிறுத்தம் என அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தக வல் அறிந்ததும் காட்பாடிபோக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப் படைபோலீசார் என அனை வரும் வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். இருந்தாலும் போக் குவரத்து நெரிசல் குறைந்த பாடு இல்லை. வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நகர்ந்து சென்றது.
மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால்நேற்று பணி முடிந்து செல்பவர். களும், வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த அவ திக்கு உள்ளானார்கள்.
இதே போல வேலூரிலும் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவ திக்குள்ளாகினர். வேலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






