என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dissolve as per Tamil Nadu Pollution Control Board regulations"

    • அணைக்குத் தொடர்ந்து அதிக அளவிலான நீர்வரத்து உள்ளது.
    • தொடர் மழைக் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கூனாண்டியூர் மற்றும் திப்பம்பட்டி ஆகிய காவிரி கரையோரப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளள வினை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில் தற்பொழுது அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரிநீராக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணைக்குத் தொடர்ந்து அதிக அளவிலான நீர்வரத்து உள்ளது.

    எனவே, காவிரி கரையோரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு, சிலைகளைக் கரைக்க வருகை தருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்.

    தொடர் மழைக் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இத்தகையச் சூழலில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வருபவர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக, சிறுவர்களை நீர்நிலைகளுக்குள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, எக்கார ணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை களின் சார்பில் விநாயகர் சிலைகள் கரைக்க அனும திக்கப்பட்ட இடங்களில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நீர்நிலைகளிலும் முன்னெச்சரிக்கைப் பலகை கள் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேச்சேரி, ஓமலூர், வெள்ளாறு, சேலம் மாநகர், கூணான்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூனாண்டியூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்குத் தேவை யான பாதுகாப்பு ஏற்பாடுகளும், திப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்க வள்ளி, வனவாசி, தார மங்கலம், குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது விநாயகர் சிலைகளை திப்பம்பட்டி காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் கரைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளன.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்க ளில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்குக் கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீஅபிநவ்,மேட்டூர் தாசில்தார் முத்துராஜா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×