என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul - palani"

    • இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.
    • உடுமலைக்கு காலை 7.34 மணிக்கு வந்து, 7.35 மணிக்கு புறப்படும்.

    கோவை

    திண்டுக்கல்-பழனி வழித்தடத்தில் செல்லும் விரைவு ெரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லா பயணிகள் ெரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்டம் தெற்கு ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை - பாலக்காடு விரைவு ெரயில் காலை 7.23 மணிக்கு உடுமலை ெரயில் நிலையம் வந்து, 7.25 மணிக்கு புறப்படும். காலை 7.52 மணிக்கு பொள்ளாச்சி ெரயில் நிலையம் வந்து, 7.55 மணிக்கு புறப்படும். அதேபோன்று பாலக்காடு-சென்னை விரைவு ெரயில் மாலை 5.12 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 5.15 மணிக்கு புறப்படும். பாலக்காடு- திருச்செந்தூர் முன்பதிவில்லா விரைவு ெரயில் காலை 7.08 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 7.10 மணிக்கு புறப்படும்.உடுமலைக்கு காலை 7.34 மணிக்கு வந்து, 7.35 மணிக்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் உடுமலைக்கு இரவு 7.28 மணிக்கு வந்து 7.29 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சிக்கு இரவு 7.58 மணிக்கு வந்து, 8 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ெரயில் நேர அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    அமிர்தா விரைவு ெரயில் வழக்கம்போல பொள்ளாச்சிக்கு காலை 5.37 மணிக்கு வந்து 5.40 மணிக்கு புறப்படும். உடுமலைக்கு 6.06 மணிக்கு வந்து 6.07 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் உடுமலைக்கு மாலை 6.30 மணிக்கு வந்து 6.32 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சிக்கு இரவு 7.02 மணிக்கு வந்து, 7.05 மணிக்கு புறப்படும். இந்த கால அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×