என் மலர்
நீங்கள் தேடியது "Dindigul News: Attempt to murder"
கொடைக்கானலில் காதலித்த மகளை விசம் கொடுத்து கொல்ல முயன்றி தந்தை உள்பட 2 பேர் கைது செய்தனர்
கொடைக்கானல்:
இவரது மகள் ஜெர்ஷா ஷெர்லி (22).இவர் தூத்துக்குடியில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். அப்போது தூத்துக்குடி நடுத்தெருவைச்சேர்ந்த மோசஸ் ஆபிரஹாம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதே போல் அடிக்கடி ஜெர்ஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி உன்னை கொன்று விடுவோம் என மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அவரோ தன் காதலனைத்தான் திருமணம் செய்வேன் எனக் கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எபினேசர் சாமுவேல் மற்றும் மாணவியின் தாய்மாமன் வினோத் ராஜா, தாயார் ஜூலியர் தங்கம் ஆகியோர் இணைந்து அவர்கள் தற்போது வசித்துவரும் கொடைக்கானல் ஆனந்தகிரி தெரு பகுதியிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து வின்டர் கிரீன் ஆயிலை மாணவியின் வாயில் ஊற்றி கொல்ல முயற்சி செய்துள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன்,சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடுவதை அறிந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.






