என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhenkanikottai Festival of Village Goddesses"

    தேன்கனிக்கோட்டையில் கிராம தேவதைகளின் உற்சவ விழா நடைபெற்றது.
    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள டி.ஜி தொட்டி பகுதியில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெற வேண்டியும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை கிராம 
    தேவதைகளின் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கிராம தேவதைகளின் உற்சவ விழா மற்றும் வீதி உலா நடைபெற்றது.

    இப்பகுதியிலுள்ள கிராம தேவதைகளான  பல்கேரியம்மன், செல்லபுரியம்மன், முத்தாலம்மா, கங்கம்மா, முத்தப்பா ஆகியசுவாமிகளை டி.ஜி. தொட்டி பகுதிக்கு கொண்டு வந்து சிறப்பு பந்தல் மேடையில்  
    அமரவைத்து சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறகு மேளதாளத்துடன் பக்தர்கள் சுவாமிகளை தோளில் சுமந்து வீதி உலா சென்று அக்னி குண்டத்தில் இறங்கி நேத்து கடன் 
    செலுத்தினர். சுவாமிகளை பின்தொடர்ந்தது ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், பக்தர்களும் அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து வந்தனர். 

    தொடர்ந்து இரவில் வான வேடிக்கைகளும் ,கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மறுநாள் காலை பந்தல் மேடையில் இருந்த அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து  பெண்கள் மாவிளக்கு ஏந்தி 
    ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படையலிட்டு பூஜைகள் செய்து வணங்கி வழிபட்டனர். இவ்விழாவில் தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு 
    அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்
    ×