search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP advice"

    • நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று வந்தார்.
    • அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அவ ருக்கு பூங்கத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று வந்தார் . அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அவ ருக்கு பூங்கத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோ சனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது? போதைப் பொருட்கள் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஓராண்டில் எவ்வளவு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன? எவ்வ ளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது? ஓராண்டில் எவ்வளவு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, போலீஸ் நிலையங்களில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் போலீசாரின் தேவைகள் குறித்தும், கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டியது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றி குற்றச்செ யல்களை தடுக்க தீவிர மாக கண்காணிப்பு நடவடிக்கை யில் ஈடுபடுமாறும் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு விருது வழங்கி கவுரவித்தார். டி.ஜி.பி ஆய்வு செய்வதை அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினை கள் மற்றும் நிலவரம் குறித்து விரிவாக டிஜிபி சைலேந்திரபாபு கேட்டறிந்தார். 

    • சின்னசேலம் வன்முறை சம்பவம் எதிரொலி போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
    • கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி–கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலி–த்தது. நேற்று திடீரென ஒன்று திரண்ட போராட்ட காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்னசேலம் நகரம் போராட்ட களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கி–சூடு நடத்தினர்.

    ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்தி–ர–பாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப் பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட–தாக 329 பேர் கைது செய் யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவல–கத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்க–வேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்

    ×