என் மலர்
நீங்கள் தேடியது "Devotees make a pilgrimage"
- 180 பேர் நேற்று பாதயாத்திரையாக, காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.
- ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அரவேணு,
கோத்தகிரியில் இருந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பழனி மலை முருகன் கோவிலில் ஜனவரி மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று காலை 10 மணிக்கு கோத்தகிரி கடை வீதி பகுதியில் உள்ள பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், அதன் தலைவர் வடிவேல் தலைமையில் தொடர்ந்து 28-வது ஆண்டாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உள்பட சுமார் 180 பேர் நேற்று பாதயாத்திரையாக, காவடிகள் ஏந்தி பழனி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.






