என் மலர்
நீங்கள் தேடியது "Denkanikottai accident"
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் வரதரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது28).
இவர் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் பஞ்சேஸ்வரம் கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் பேளூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது இருசக்கர வாகனமும், பஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிவராஜ் என்பவரின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற சிவராஜ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சிவராஜ் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






