என் மலர்
நீங்கள் தேடியது "Demonstration on behalf of Departmental Officers Association"
- பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடத்தது
- ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி திட்ட அலுவலர், மிருணாளினி பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரப் பொறியாளர் பெரோஸ் கான் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், ஊழியர் விரோத போக்கை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டக் கிளை துணைத் தலைவர் தேவராஜ், ஆனந்த், பொருளாளர் ஜானகிராமன், மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






