என் மலர்

  நீங்கள் தேடியது "Delhi Hunger Deaths"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC
  புதுடெல்லி:

  டெல்லியில் மந்தவாலி என்ற பகுதியில் மங்கள் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவருடைய மனைவியும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர்களின் 8, 5, 2 வயது பெண் குழந்தைகள் பட்டினியால் தவித்தனர். 

  இதற்கிடையே மங்களின் ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போக அக்கம்பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டனர். பின்னர் அவர்களின் உதவியும் கிடைக்கவில்லை.

  இதனிடையே மங்கள் வேலைக்காக வீட்டை விட்டு சில நாட்களுக்கு முன்பு சென்றார். தந்தை, தாய் கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் தவித்துள்ளனர். இந்நிலையில், மயங்கிய நிலையில் 3 சிறுமிகளும் 24-ந் தேதி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.   சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தததில் சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். 

  சிறுமிகள் உணவின்றி இறந்த விவகாரம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC

  ×