என் மலர்
நீங்கள் தேடியது "Deer die"
- வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடக்கிறது
- பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள அகராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் விவசாய நிலத்தில் நேற்று புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அதனை அங்கிருந்த நாய்கள் துரத்தி வேட்டையாடியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மான் இறந்து போனது.
அதேபோல் கரடிகுடி அடுத்த சென்ராயன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பனின் விவசாய நிலத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தி கடித்தது.
நாய்களிடம் இருந்து தப்பிக்க பயந்து ஓடிய மான் விவசாய கிணற்றில் விழுந்து பலியானது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று 2 புள்ளி மான்களின் உடல்களை கைப்பற்றி கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்த பின்பு காப்பு காட்டில் எரித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஒடுக்கத்தூர் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் தொடர்நது உயிரிழக்கிறது. வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற சம்பவம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிக அளவில் கானப்படுகின்றது. இங்கு காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது மழை இல்லாமல் வெயில் காலம் என்பதால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது.
அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன.
மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதியை உயிருடன் அதிகம் செல்வதில்லை.
பல நேரங்களில் நாய் கடித்தும், பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது.
வெயில் காலத்தில் மட்டுமே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றது. அவ்வாறு வரும் விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் அனுப்ப வேண்டுமே தவிர அவற்றை அடக்கம் செய்ய கூடாது என ஆவேசமாக பேசி வருகின்றனர். வன ப்பகுதியில் விலங்குகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.
அதனை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பினால் போதும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் முழுமையாக தடுக்கலாம். வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்புகள் சம்பவம் நடக்கிறது.
இதுபோல் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






