என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Decision to build shops"

    • குடியாத்தம் டவுன் பகுதியில் அமைகிறது
    • வருவாயை பெருக்க நடவடிக்கை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற அவசரக் கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சவுந்தரராஜன் பேசியதாவது:-

    நகர் மன்ற தலைவர் குடியாத்தம் நகராட்சியில் பல பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் நகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் 200 கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை, அரசு மருத்துவமனை தெரு உள்ளிட்ட 3 இடங்களில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைத்தும் நகராட்சி வருவாய் பெருக்க தீர்மானம் கொண்டு வருவதாக தெரிவித்தார்.

    நகர மன்ற உறுப்பினர்கள் அவர்கள் பகுதியில் நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக அது குறித்து தெரியப்படுத்த வேண்டும். நகராட்சி இடங்கள் பாகுபாடு இன்றி மீட்கப்படும்.

    அனைத்து உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு நகராட்சி வருவாயை பெருக்க வேண்டும் நகராட்சி நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வரும் வருவாயில் சம்பளம் வட்ட உள்ளிட்ட செலவினங்கள் 49 சதவீதம் செய்ய வேண்டும்.

    ஆனால் குடியாத்தம் நகராட்சியில் 75 சதவீதம் செலவு ஆகிறது நகராட்சி வருவாய் பெருக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×