search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death of laborer"

    • அருள் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி.
    • வீட்டிற்கு போன் மூலம் ஏஜென்ட் தகவல் கொடுத்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 50). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இப்பகுதியில் வேலை இல்லாத நாட்களில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ஏஜெண்ட் மூலம் சென்று கரும்பு வெட்டும் பணி செய்து வந்தார். அதன்படி கடந்த 2 மாதங்ளுக்கு முன்பு அருள் மற்றும் அவருடன் 10 பேர் மரக்காணத்திலிருந்து கருப்பு வெட்டும் கூலி வேலைக்கு கர்நாடகா மாநிலத்திற்கு சென்றனர். இவர்கள் இரண்டு மாதமாக அங்கேயே தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அருளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம் என அவரது வீட்டிற்கு போன் மூலம் ஏஜென்ட் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அருளின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்த நிலையில் திடீரென அருளின் பிரேதத்தை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


    மேலும், உறவினர்கள் அருளின் இறப்பில் மர்மம் உள்ளது. இதனால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் இவரை கர்நாடக மாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் மற்றும் வேலை வாங்கிய உரிமையாளர் இங்கு வரவேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பிரேதத்தை கொண்டு வந்த ஆம்புலன்சையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து அருளின் உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம், மரக்காணம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×