search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death fish floating"

    • தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது.
    • இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கொட்டக்குடி ஆறு, அணை பிள்ளையார் அணைக்கட்டு ராஜ வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து வருகிறது. இந்த கண்மாயை நம்பி 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவிலான மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து குறைந்து கண்மாய் வறண்டு போகும் நிலையில் உள்ளது.

    தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது. இதன் காரணமாக கண்மாயில் மீன்கள் அனைத்தும் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நீர் அனைத்தும் மாசடைந்து காணப்படுகிறது.

    இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம். தற்போது மீன்கள் அனைத்தும் செத்து கரை ஒதுங்கியதால் ஏமாற்ற த்துடன் திரும்பிச் செல்கி ன்றது.

    இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் இந்த கண்மாயில் மீன்களே கிடைக்காத நிலை உருவாகும். மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் ராஜ வாய்க்காலில் கலக்காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×