என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death by drowning in a well"

    • பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி பரிதாபம்.

    கணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்கா நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாலிக் பாஷா (வயது 44). இவரது மகன் முகம்மது அசிம் (14). அந்தப் பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23-ந் தேதி பள்ளி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாலிக் பாஷா கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை நாகநதி ஆற்று கரையோரம் உள்ள கிணற்றில் மாணவர் உடல் மிதப்பதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மிதந்த உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    அது முகமது அசிம் என்று தெரியவந்தது. விசாரணையில் கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×